top of page

CBKM is an active organization committed to promoting and safeguarding the diverse Tamil culture and language. Our goal is to build a strong community and offer opportunities for people to connect, learn, and honour our heritage. Through various events and activities, we seek to cultivate a profound understanding and appreciation of Tamil culture and language among individuals from all walks of life. Come join us in our efforts to uphold and celebrate the richness of Tamil culture!

தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு

தமிழர் பண்பாடு தமிழ் மக்களின் கலாச்சாரம் ஆகும். எஞ்சியிருக்கும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை தமிழ் மக்கள் பேசுகிறார்கள். தமிழகம் 400 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது மற்றும் 5,500 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கலாச்சார வரலாற்றைக் கொண்டுள்ளது. எனவே, தமிழர் பண்பாடு பல ஆண்டுகளாக பல்வேறு தாக்கங்களைக் கண்டது.

தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்தப்படுகிறது. தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும். 

ஆண்டு நிகழ்வுகள்
பொங்கல் திருநாளின் நோக்கம்

பொங்கல். இது ஒரு தமிழர் இனத் திருவிழா. சாதி, சமயம் மற்றும் பல வேறுபாடுகளை மறந்து, கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த குடியின் அடையாள, பண்பாட்டு விழாவாக பொங்கல் திகழ்கிறது. உழைப்பின் மகிமையை ஊருக்கு, உலகுக்கு சொல்லும் விழா, பொங்கல் விழா, இது இயற்கையோடு இயைந்த மூத்த குடியின் திருநாள். மனிதன் உயிர் வாழ உணவு தேவை. நமது முக்கியமான உணவுப் பொருள் அரிசி. இதனை விளைவித்து, அறுவடை செய்து, வையத்து உயிருக்கெல்லாம் சோறிடும், அறுவடைத் திருநாளான பொங்கல் விழா போற்றத் தகுந்ததல்லவா! பொங்கல் நன்றி தெரிவிக்கும் விழா.

தீபாவளியின் பெருமை

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.

உலகெங்கிலும் மக்கள் விழாக்களைக் கொண்டாடுவதன் நோக்கம். இயந்திர கதியிலான தங்கள் இயல்பு வாழ்க்கையில் சோர்வு நீங்கி, சுறுசுறுப்படைவதற்காகத்தான். தேக்கமான வாழ்க்கைக்கு வடிகாலாக இருப்பவைகளே விழாக்கள். விழாக்கள் கொண்டாடப்படுவதன் மூலம், புத்துணர்வும், புது எழுச்சியும், புதிய நம்பிக்கையும் பிறக்கிறது. காலைக் கதிரவன் அன்றைய நாளின், நம்பிக்கையின் அடையாளம். விழாக்கள், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற மகிழ்ச்சியின் அடையாளம்

bottom of page